Thursday, March 25, 2021

சிந்தனைகள்

 

சிந்தனைகள்

இடம், பிங்கலை என்னும் நாடிகள் பருகும் உயிர் வாயுவின் மூலம் பாம்பெனச் சுருண்டிருக்கும் மூலாதாரத்தை எழுப்பி சுழுமுனை வழியே கபாலத்திற்குக் கொண்டு செல்வது யோகம் என்றும் தியானம் என்றும் அறியப்படுகிறது. அமுத நிலையும், ஆதித்தன் இயக்கமும், குமுத சகாயன் குணத்தையும் கூறி, இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும், உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி என்று சொல்லும் அகவல் இப்படித் தொடர்கிறது- கருத்தினில் கபால வாயில் காட்டி, இருத்தி முத்தி இனிதெனக் கருளி.... அகவலை முக்கியச் செய்திகளைச் சொல்லும் அறிவியல் என்றும் சொல்லலாம். ஐம் புலன்கள், அவற்றின் வழியே உணரப்படும் ஐந்து சுவைகள், முக்கிய ஆறு சக்கரங்கள் (நாளமில்லாச் சுரப்பிகள்) இடைச் சக்கரத்தின் பதினாறு நிலைகள் என்று உடலையும், உள் உறுப்புக்களையும் யோகத்தில் கண்டறிந்து சொன்னது அகவல். அதில் பிள்ளையாரை மட்டும் காண்பது பக்தியாக இருக்கலாம். குண்டலினியை எழுப்பி மேலுச்சியில் அமுதத்தை கொணர்வது யோகமாக இருக்கலாம். ஆனால், சித்தர்கள் உடலை அறிந்தவர்கள், உயிரை உணர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இன்னமும் கூட அகவலின் மறை பொருள் தெளிவாகத் தெரியாத ஒன்று. உடலை, உள்ளுறுப்பை, நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை, மூச்சுக்கலையை, அறிவியலும், ஆன்மீகமும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. (இப்பகுதி கட்டுரையின் பேசு பொருளுடன் நேரடித் தொடர்பிலில்லை; கருவிகள் இல்லாமல் உடலையும், உள் உறுப்புக்களையும் அதன் செயல்பாடுகளையும் காணும் அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக நம்மை இலக்கமாக வடிவெடுக்க வைத்து நம் செயற்திறனை மேம்படுத்தி நலம் காக்கும் தொழில் நுட்பத்தில் நுண்ணிய வேர் அகவலில் அகப்படுமா என்ற கேள்வியை வெளிப்படையாக சிந்தித்ததின் விளைவு இது.

No comments:

Post a Comment

சிந்தனைகள்

  சிந்தனைகள் இடம் , பிங்கலை என்னும் நாடிகள் பருகும் உயிர் வாயுவின் மூலம் பாம்பெனச் சுருண்டிருக்கும் மூலாதாரத்தை எழுப்பி சுழுமுன...